ஒபதியா 1:1-21

 ஒபதியா* பார்த்த தரிசனம். ஏதோமைப்+ பற்றி உன்னதப் பேரரசராகிய யெகோவா சொன்னதை ஒபதியா இப்படி விவரித்தார்: “யெகோவாவிடமிருந்து நமக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.எல்லா தேசங்களுக்கும் அதைச் சொல்ல ஒரு தூதுவர் அனுப்பப்பட்டிருக்கிறார். ‘தயாராகுங்கள், ஏதோமுக்கு எதிராகப் போர் செய்யப் புறப்படுவோம்!’+ என்று அந்தத் தூதுவர் அறிவிக்கிறார்.”   கடவுள் இப்படிச் சொல்கிறார்: “உன்னைத் தேசங்களிலேயே அற்பமான தேசமாக்கினேன்.நீ அடியோடு வெறுக்கப்படுகிறாய்.+   பாறைகளின் நடுவே பாதுகாப்பாகக் குடியிருப்பவனே,உயரமான குன்றின் மேல் வாழ்கிறவனே,‘யாராலும் என்னைக் கீழே தள்ள முடியாது’ என்று உள்ளத்தில் சொல்கிறவனே,நீ அகங்காரமாக* நடந்து மோசம்போனாயே!+   நீ கழுகைப் போல் உயரத்தில் தங்கினாலும்,*நட்சத்திரங்களின் நடுவில் கூடு கட்டினாலும்,அங்கிருந்து உன்னைக் கீழே தள்ளுவேன்.” யெகோவாவே இதைச் சொல்கிறார்.   “ராத்திரியில் வருகிற திருடர்கள் என்ன செய்வார்கள்?தங்களுக்குப் போதுமானதை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சத்தை விட்டுவிடுவார்கள்தானே? திராட்சைக் குலைகளை அறுக்க வருகிறவர்கள் என்ன செய்வார்கள்? கொஞ்சத்தை விட்டுவைப்பார்கள், இல்லையா?ஆனால், நீ மிச்சம் மீதியில்லாமல் அடியோடு அழிக்கப்படுவாய்!*+   ஏசாவே, உன்னை வலைவீசித் தேடினார்கள்! உன் புதையல்களைக் கொள்ளையடிக்கத் துடித்தார்கள்!   எல்லைவரை உன்னைத் துரத்தினார்கள். உன் கூட்டாளிகள் எல்லாரும் உன்னை ஏமாற்றினார்கள். உன்னோடு சமாதானமாக இருந்தவர்கள் உன்னை வீழ்த்தினார்கள். உன்னோடு சேர்ந்து சாப்பிடுகிறவர்கள் உனக்கு வலை விரிப்பார்கள்.ஆனால், நீ அதை உணர மாட்டாய்.   அந்த நாளில், ஏதோமில் உள்ள ஞானிகளையும்,+ஏசாவின் மலைப்பகுதியில் உள்ள அறிவாளிகளையும்*நான் அழிக்காமல் விடமாட்டேன்” என்று யெகோவா சொல்கிறார்.   “ஏசாவின் மலைப்பகுதியில் இருக்கிற எல்லாரும் படுகொலை செய்யப்படுவார்கள்.+தேமானே,+ உன் வீரர்கள் அப்போது கதிகலங்குவார்கள்.+ 10  உன் சகோதரனான யாக்கோபுக்கு நீ கொடுமை செய்தாய்.+அதனால், நீ பெருத்த அவமானம் அடைவாய்.+அடியோடு அழிந்துபோவாய்.+ 11  அவனுடைய வீரர்களை அன்னியர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+எருசலேமுக்குள் மற்ற தேசத்து ஜனங்கள் புகுந்தார்கள், அதைப் பங்கிட குலுக்கல் போட்டார்கள்.+இதையெல்லாம் நீ பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்தாய்.எதிரிகளைப் போலவே நீயும் நடந்துகொண்டாய். 12  உன் சகோதரனுக்குக் கஷ்டம் வந்தபோது நீ ஏன் கைகொட்டிச் சிரித்தாய்?+யூதா ஜனங்களுக்கு அழிவு வந்தபோது நீ ஏன் சந்தோஷத்தில் துள்ளினாய்?+அவர்கள் வேதனையில் அவதிப்பட்டபோது நீ ஏன் அகம்பாவமாகப் பேசினாய்? 13  அழிவு நாளில் என் ஜனங்களுடைய நகரவாசலுக்குள் ஏன் போனாய்?+அழிவு நாளில் அவர்கள் சின்னாபின்னமானதைப் பார்த்து ஏன் உள்ளுக்குள் சிரித்தாய்?அழிவு நாளில் அவர்களுடைய சொத்துகளை ஏன் சுருட்டிக்கொண்டாய்?+ 14  தப்பித்து ஓடியவர்களை வெட்டி வீழ்த்த ஏன் சாலை சந்திப்புகளில் காத்திருந்தாய்?+மீதியிருந்தவர்களை இக்கட்டு நாளில் ஏன் எதிரிகளிடம் பிடித்துக் கொடுத்தாய்? நீ இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது.+ 15  யெகோவா எல்லா தேசங்களையும் தண்டிக்கப்போகும் நாள் வந்துவிட்டது.+ நீ செய்த தீமை உனக்கே திருப்பிச் செய்யப்படும்.+ மற்றவர்களுக்கு நீ செய்த கெடுதல் உன் தலையிலேயே வந்து விடியும். 16  என்னுடைய பரிசுத்த மலையில் நீ மதுவைக் குடித்தாய்.அதேபோல், எல்லா தேசத்தாரும் என்னுடைய கோபம் என்ற மதுவைக் குடிப்பார்கள்.+ அதை மடமடவென்று குடிப்பார்கள்.பின்பு, இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். 17  ஆனால், தப்பிக்கிறவர்கள் சீயோன் மலையில் இருப்பார்கள்.+சீயோன் மலை பரிசுத்தமாக இருக்கும்.+யாக்கோபின் வம்சத்தார் தங்களுக்குச் சேர வேண்டியதைக் கைப்பற்றுவார்கள்.+ 18  யாக்கோபின் வம்சத்தார் நெருப்பு போலவும்,யோசேப்பின் வம்சத்தார் தீப்பிழம்பு போலவும் இருப்பார்கள்.ஆனால், ஏசாவின் வம்சத்தார் வைக்கோலைப் போல இருப்பார்கள்.இவர்களை யோசேப்பின் வம்சத்தார் கொளுத்திவிடுவார்கள்.ஏசாவின் வம்சத்தாரில் ஒருவரும் தப்பிக்க மாட்டார்கள்.+யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார். 19  அவர்கள் நெகேபையும் ஏசாவின் மலைப்பகுதியையும்,+சேப்பெல்லாவையும் பெலிஸ்தியர்களின் தேசத்தையும்,+ எப்பிராயீமின் நிலத்தையும் சமாரியாவின் நிலத்தையும்+ சொந்தமாக்கிக்கொள்வார்கள்.கீலேயாத்தை பென்யமீன் சொந்தமாக்கிக்கொள்வான். 20  இந்த அரணிலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போன இஸ்ரவேல் ஜனங்களுக்கு+ கானானியர்களின் தேசம் சொந்தமாகும்.சாறிபாத்+ வரையுள்ள பகுதி அவர்கள் கைக்கு வந்து சேரும். எருசலேமிலிருந்து செப்பாராத்துக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்கள் நெகேபின் நகரங்களைக் கைப்பற்றுவார்கள்.+ 21  ஏசாவின் மலைப்பகுதிக்குத் தீர்ப்பு கொடுப்பதற்காக+மீட்பவர்கள் சீயோன் மலைக்குப் போவார்கள்.அப்போது, அரசாட்சி யெகோவாவுக்குச் சொந்தமாகும்”+ என்று அவர் சொல்கிறார்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “யெகோவாவின் ஊழியர்.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
அல்லது, “பறந்தாலும்.”
அல்லது, “அவர்கள் எந்தளவுக்கு அழித்துவிடுவார்கள்!”
வே.வா., “பகுத்தறிவு உள்ளவர்களையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா