ஏசாயா 53:1-12

53  நாங்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதில்* விசுவாசம் வைத்தது யார்?+ யெகோவா யாருக்குத் தன்னுடைய பலத்தை*+ காட்டியிருக்கிறார்?+   அவர் துளிர்போல்+ அவருக்குமுன்* துளிர்ப்பார்; வறண்ட நிலத்திலுள்ள வேர்போல் இருப்பார். அவருடைய தோற்றத்தில் கம்பீரமோ ஆடம்பரமோ இல்லை,+நம்மைக் கவரும் அளவுக்கு எந்த விசேஷமும் இல்லை.*   வலிகளையும் வியாதிகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்.ஆனாலும், ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்.+ ஒருவிதத்தில், அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.* நாம் அவரை வெறுத்தோம்; அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.+   உண்மையில், அவர் நம்முடைய வியாதிகளைச் சுமந்தார்.+நம் வலிகளைத் தாங்கினார்.+ நாமோ கடவுள்தான் அவருக்குத் தண்டனையையும்,* அடியையும், வேதனையையும் கொடுத்ததாக நினைத்தோம்.   ஆனால், நம்முடைய குற்றத்துக்காகத்தான் அவர் குத்தப்பட்டார்.+நம்முடைய பாவங்களுக்காகத்தான் அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்.+ நமக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைப்பதற்காகத்தான் அவர் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.+அவருடைய காயங்களால்தான் நாம் குணமானோம்.+   நாம் எல்லாரும் ஆடுகளைப் போல அலைந்து திரிந்தோம்.+நமக்கு இஷ்டமான வழியில் போனோம்.ஆனால், நம் எல்லாருடைய பாவங்களையும் அவர் சுமக்கும்படி யெகோவா செய்தார்.+   அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை. வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+   அவர் அநியாயமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.*அவருடைய வம்சத்தின்* விவரங்களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? அவர்தான் இந்த உலகத்திலிருந்து ஒழித்துக்கட்டப்பட்டாரே.+என் ஜனங்களுடைய குற்றத்துக்காக அடிக்கப்பட்டாரே.*+   அவருடைய பேச்சில் சூதுவாதே இல்லை.அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை.*+ஆனாலும், பொல்லாதவர்கள் நடுவே அவருக்குக் கல்லறை கொடுக்கப்பட்டது.+அவர் இறந்தபோது பணக்காரரோடு இருந்தார்.+ 10  அவரை வேதனைகளால் நொறுக்க யெகோவா முடிவுசெய்தார்.* அதனால், அவர் பாடுகள் படுவதற்கு விட்டுவிட்டார்.கடவுளே, நீங்கள் அவருடைய உயிரைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தால்,+அவர் தன்னுடைய வம்சத்தைப் பார்ப்பார்; காலம்காலமாக வாழ்வார்.+ அவர் மூலமாக யெகோவாவின் விருப்பம் நிறைவேறும்.+ 11  தான் பட்ட பாடுகளுக்கான பலனைப் பார்த்து அவர் மனநிறைவு அடைவார். நீதியுள்ளவராகிய என் ஊழியர்+ தன்னுடைய அறிவினால்,நிறைய பேர் நீதிமான்களாவதற்கு உதவுவார்.+அவர்களுடைய குற்றங்களை அவரே சுமப்பார்.+ 12  அவர் தன்னுடைய உயிரையே கொடுப்பார்.+குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்படுவார்.+பலருடைய பாவங்களைச் சுமப்பார்.+குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்.+அதனால், பலரோடுகூட அவருக்கும் நான் ஒரு பங்கைக் கொடுப்பேன்.கைப்பற்றப்பட்டதை அவர் மற்ற வீரர்களோடு பங்குபோடுவார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “கையை.”
அல்லது, “நாங்கள் கேட்ட விஷயத்தில்.”
இங்கே ‘அவருக்கு’ என்பது துளிர்ப்பதைப் பார்க்கும் ஒருவரையோ கடவுளையோ குறிக்கலாம்.
வே.வா., “நாம் எதிர்பார்க்கிற விசேஷ தோற்றம் அவருக்கு இல்லை.”
அல்லது, “மக்கள் தங்களுடைய முகத்தை அவரிடமிருந்து திருப்பிக்கொண்டார்கள்.”
வே.வா., “வியாதியையும்.”
நே.மொ., “ஒடுக்கப்பட்டதாலும் தீர்ப்பு பெற்றதாலும் அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்.”
வே.வா., “வாழ்க்கையின்.”
வே.வா., “அடித்துக் கொல்லப்பட்டாரே.”
வே.வா., “வன்முறையில் இறங்கவில்லை.”
வே.வா., “அவரை வேதனைகளால் நொறுக்குவது யெகோவாவின் சித்தமாக இருந்தது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா