ஏசாயா 49:1-26

49  தீவுகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்.தொலைதூரத்தில் இருக்கிற தேசங்களே, கவனமாகக் கேளுங்கள்.+ நான் பிறப்பதற்கு முன்பே யெகோவா என்னை அழைத்தார்.+ நான் தாயின் வயிற்றில் இருந்தபோதே என் பெயரைச் சொன்னார்.   என்னுடைய நாவை* கூர்மையான வாளாக்கினார்.அவருடைய கையின் கீழே* என்னைப் பாதுகாப்பாக வைத்தார்.+ பளபளக்கும் அம்புபோல் என்னை ஆக்கினார்.அவருடைய அம்புக்கூட்டில்* என்னை மறைத்து வைத்தார்.   அவர் என்னிடம், “இஸ்ரவேலே, நீ என் ஊழியன்.+உன் மூலமாக என் மகிமையைக் காட்டுவேன்”+ என்று சொன்னார்.   ஆனால் நான் அவரிடம், “நான் உழைத்தது வீணாகிவிட்டது. என் சக்தியையெல்லாம் செலவழித்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும், யெகோவா எனக்கு நிச்சயம் நீதி செய்வார்.என் கடவுள் எனக்குப் பலன் கொடுப்பார்”+ என்று சொன்னேன்.   தாயின் வயிற்றிலேயே என்னைத் தன்னுடைய ஊழியனாக உருவாக்கிய யெகோவா,இஸ்ரவேலை ஒன்றுதிரட்டவும், யாக்கோபைத் தன்னிடம் கூட்டிக்கொண்டு வரவும்+ என்னைத் தேர்ந்தெடுத்தார்.யெகோவாவின் கண்களில் நான் மகிமை பெறுவேன்.என் கடவுள் எனக்குப் பக்கபலமாக இருப்பார்.   அவர் என்னிடம், “நீ யாக்கோபின் கோத்திரங்களை எடுத்து நிறுத்தும்படியும்,இஸ்ரவேலில் உயிர்தப்பியவர்களைக் கூட்டிக்கொண்டு வரும்படியும் உன்னை என் ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.அதுமட்டுமல்ல, பூமியெங்கும் இருக்கிறவர்களை மீட்பதற்காக,+உன்னைத் தேசங்களுக்கெல்லாம் ஒளியாகவும் ஆக்கியிருக்கிறேன்”+ என்று சொன்னார்.  ஜனங்களால் அவமதிக்கப்படுகிறவரும்+ அருவருக்கப்படுகிறவரும் ஆட்சியாளர்களுக்குப் பணிவிடை செய்கிறவருமாக இருப்பவரிடம் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும் இஸ்ரவேலை விடுவிக்கிறவருமான யெகோவா+ சொல்வது இதுதான்: “ராஜாக்கள் பார்த்து எழுந்து நிற்பார்கள்.தலைவர்கள் தலைவணங்குவார்கள்.ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளான யெகோவா நம்பகமானவராக இருக்கிறார்.+அவர் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.”+   யெகோவா இப்படிச் சொல்கிறார்: “அனுக்கிரகக் காலத்தில் நான் உனக்குப் பதிலளித்தேன்.+மீட்பின் நாளில் உனக்கு உதவி செய்தேன்.+ஜனங்களுக்கு உத்தரவாதமாக* கொடுப்பதற்காக உன்னைப் பாதுகாத்து வந்தேன்.+நீ தேசத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவரவும்,பாழாகிப்போன நிலங்களில் ஜனங்களைத் திரும்ப வாழ வைக்கவும்,+   சிறையில் இருப்பவர்களிடம், ‘வெளியே வாருங்கள்!’+ என்று சொல்லவும், இருட்டில் இருப்பவர்களிடம்,+ ‘வெளிச்சத்துக்கு வாருங்கள்!’ என்று சொல்லவும் அப்படிச் செய்தேன். வழியோரங்களில் அவர்கள் மேய்வார்கள்.பாதைகளின்* இரண்டு பக்கங்களிலும் அவர்களுடைய மேய்ச்சல் நிலங்கள் இருக்கும். 10  அவர்கள் பசியில் வாட மாட்டார்கள், தாகத்தில் தவிக்க மாட்டார்கள்.+அனல் காற்றோ வெயிலோ அவர்களைத் தாக்காது.+ ஏனென்றால், அவர்கள்மேல் இரக்கமுள்ளவர் அவர்களை வழிநடத்துவார்;+நீரூற்றுகள் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போவார்.+ 11  நான் என்னுடைய மலைகளையெல்லாம் பாதைகளாக்குவேன்.என் நெடுஞ்சாலைகளை உயர்த்துவேன்.+ 12  இதோ, அவர்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள்.+வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருகிறார்கள்.சீனீம் தேசத்திலிருந்து வருகிறார்கள்.”+ 13  வானமே, சந்தோஷத்தில் பாடு! பூமியே, பூரித்துப் பாடு!+ மலைகளே, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யுங்கள்!+ ஏனென்றால், யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்.+கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஜனங்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+ 14  ஆனால், “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்,+ யெகோவா என்னை மறந்துவிட்டார்”+ என்று சீயோன் சொல்லிக்கொண்டே இருந்தது. 15  ஒரு தாய் தன் வயிற்றில் சுமந்த பிள்ளைக்குக் கரிசனை காட்டாமல் இருப்பாளா?பால் குடிக்கும் தன் குழந்தையை மறப்பாளா? அவள் மறந்தாலும், நான் ஒருபோதும் உன்னை மறக்க மாட்டேன்.+ 16  இதோ, நான் உன்னை என் உள்ளங்கையில் செதுக்கி வைத்திருக்கிறேன். உன் மதில்களை என் கண் முன்னாலேயே வைத்திருக்கிறேன். 17  உன்னை நாசமாக்கியவர்கள் உன்னைவிட்டு ஓடிப் போவார்கள். உன் பிள்ளைகள் வேகமாக வருகிறார்கள். 18  உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார். அவர்கள் எல்லாரும் ஒன்றுகூடுகிறார்கள்.+ உன்னிடம் வருகிறார்கள். யெகோவா இப்படிச் சொல்கிறார்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,*கல்யாணப் பெண்ணுக்கு நகைகள் அலங்காரமாக இருப்பது போல அவர்கள் உனக்கு அலங்காரமாக இருப்பார்கள். 19  உன்னுடைய ஊர்களெல்லாம் வெறுமையாகவும் பாழாகவும் கிடந்தது.+ஆனால், இனி இடமே இல்லாதளவுக்கு மக்களால் நிறைந்திருக்கும்.+உன்னை விழுங்கியவர்கள்+ தொலைதூரத்தில் இருப்பார்கள்.+ 20  நீ பிள்ளைகளை இழந்து தவித்த சமயத்தில் பிறந்தவர்கள் உன்னிடம் வந்து,‘இந்த இடம் எங்களுக்கு ரொம்ப நெரிசலாக இருக்கிறது. எங்களுக்குப் பெரிய இடம் வேண்டும்’+ என்று சொல்வார்கள். 21  ஆனால் நீ உன் உள்ளத்தில்,‘நான்தான் அன்றைக்கே பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டேனே, மலடி ஆகிவிட்டேனே,வேறு தேசத்துக்குக் கைதியாகக் கொண்டுபோகப்பட்டேனே,தன்னந்தனியாக இருந்தேனே,+ அப்படியிருக்கும்போது இந்தப் பிள்ளைகள் எப்படிப் பிறந்தார்கள்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?+இவர்களை வளர்த்து என்னிடம் அனுப்பியது யார்?’+ என்று கேட்பாய்.” 22  உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இதோ! தேசங்களுக்கு நேராக என் கையை உயர்த்துவேன்.ஜனங்கள் பார்ப்பதற்காக என் கொடியை ஏற்றுவேன்.*+ அப்போது, அவர்கள் உன் மகன்களைக் கையில் தூக்கிக்கொண்டு வருவார்கள்.உன் மகள்களைத் தோளில் சுமந்துகொண்டு வருவார்கள்.+ 23  ராஜாக்கள் உனக்குப் பணிவிடை செய்வார்கள்.+இளவரசிகள் உன்னைக் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் உனக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுவார்கள்.+உனக்கு அடங்கி நடப்பார்கள்.*+அப்போது, நான் யெகோவா என்று நீ புரிந்துகொள்வாய்.என்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் அவமானம் அடைய மாட்டார்கள்.”+ 24  சிறைபிடிக்கப்பட்டவர்களை ஒரு கொடுங்கோலனின் கையிலிருந்து விடுவிக்க முடியுமா?பலசாலியின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியுமா? 25  ஆனால், யெகோவா சொல்வது இதுதான்: “சிறைபிடிக்கப்பட்டவர்கள் கொடுங்கோலனின் கையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.+பலசாலியின் பிடியிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.+ உன்னை எதிர்க்கிறவர்களை நான் எதிர்ப்பேன்.+உன் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன். 26  உனக்குக் கொடுமை செய்தவர்களின் சதையை அவர்களே தின்னும்படி செய்வேன்.தித்திப்பான திராட்சமதுவைக் குடிப்பது போல அவர்களுடைய இரத்தத்தையே குடிக்கும்படி செய்வேன். அப்போது, உங்களை மீட்கிறவரும்,+ விடுவிக்கிறவரும்,+யாக்கோபின் வல்லமையுள்ள கடவுளுமான+ யெகோவா நான்தான் என்றுஎல்லா ஜனங்களும் தெரிந்துகொள்வார்கள்.”+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “வாயை.”
நே.மொ., “நிழலிலே.”
அம்புகளை வைப்பதற்கான சாதனம்.
வே.வா., “ஒப்பந்தமாக.”
அல்லது, “குன்றுகளின்.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
அதாவது, “கொடிக் கம்பத்தை நாட்டுவேன்.”
நே.மொ., “உன் பாதத்தில் உள்ள தூசியை நக்குவார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா