ஏசாயா 35:1-10

35  வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும்.+பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.+   அது கண்டிப்பாகப் பூத்துக் குலுங்கும்.+சந்தோஷம் பொங்கப் பாடும். எழில் கொஞ்சும் லீபனோனைப் போல் மாறும்.+கர்மேலைப்+ போலவும் சாரோனைப்+ போலவும் செழிக்கும். நம் கடவுளான யெகோவாவின் மகிமையையும் மேன்மையையும் அவர்கள் பார்ப்பார்கள்.   பலமில்லாத கைகளைப் பலப்படுத்துங்கள்.தள்ளாடுகிற முழங்கால்களைத் திடப்படுத்துங்கள்.+   பதற்றத்தில் இருப்பவர்களைப் பார்த்து, “தைரியமாக இருங்கள், பயப்படாதீர்கள். உங்களுடைய எதிரிகளை உங்கள் கடவுள் பழிவாங்க வருகிறார்.அவர்களைப் பழிதீர்ப்பதற்கு வருகிறார்.+ அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார்”+ என்று சொல்லுங்கள்.   அப்போது, கண் தெரியாதவர்களுக்குக் கண் தெரியும்.+காது கேட்காதவர்களுக்குக் காது கேட்கும்.+   நடக்க முடியாதவர்கள் மான்போல் துள்ளி ஓடுவார்கள்.+பேச முடியாதவர்கள் சந்தோஷத்தில் பாடுவார்கள்.+ வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும்.பாலைநிலத்தில் ஆறுகள் பாய்ந்தோடும்.   வறண்ட நிலம் நாணல் நிறைந்த குளமாக மாறும்.தண்ணீர் இல்லாத நிலத்தில் நீரூற்றுகள் புறப்படும்.+ நரிகள் தங்கிய இடத்தில்+பசும்புல்லும் நாணற்புல்லும் கோரைப்புல்லும் வளரும்.   ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+அது பரிசுத்தமான வழி என்று அழைக்கப்படும். பரிசுத்தமில்லாத யாருமே அதில் நடந்துபோக மாட்டார்கள்.+ தகுதியுள்ள மக்கள் மட்டுமே போவார்கள்.புத்திகெட்ட யாராலும் அந்த வழியில் கால்வைக்க முடியாது.   அங்கே சிங்கம் இருக்காது.கொடிய காட்டு மிருகங்கள் எதுவுமே இருக்காது. அவை அந்த வழியிலேயே வராது.+மீட்கப்பட்டவர்கள் மட்டுமே அதில் நடப்பார்கள்.+ 10  யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+ மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+ எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா