எஸ்றா 9:1-15

9  பின்பு அதிகாரிகள் என்னிடம் வந்து, “வேறு தேசத்தாரான கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள்,+ எமோரியர்கள்+ ஆகியவர்களோடு இஸ்ரவேல் ஜனங்களும் குருமார்களும் லேவியர்களும் ஒட்டி உறவாடுகிறார்கள். அவர்களுடைய அருவருப்பான பழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்.+  அவர்களுடைய குடும்பங்களிலிருந்து தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண் எடுக்கிறார்கள்.+ பரிசுத்த சந்ததியாகிய+ இவர்கள் இப்போது வேறு தேசத்தாரோடு ஒன்றாகக் கலந்துவிட்டார்கள்.+ அதிகாரிகளும் துணை அதிகாரிகளும்தான் இதில் முக்கியக் குற்றவாளிகள்” என்றார்கள்.  இதைக் கேட்டதும் நான் என் உடையை* கிழித்து, என் தலையிலிருந்தும் தாடியிலிருந்தும் முடியைப் பிடுங்கி, அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.  அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய வார்த்தைகளுக்குப் பயந்த எல்லாரும், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுடைய பாவங்களின் காரணமாக என்னிடம் கூடிவந்தார்கள். ஆனால், நான் சாயங்காலத்தில் உணவுக் காணிக்கை+ செலுத்தப்படும்வரை அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.  துக்கத்தில் மூழ்கிப்போயிருந்த நான், சாயங்காலத்தில் உணவுக் காணிக்கை+ செலுத்தப்படும் நேரம் வந்தபோது, கிழிந்த உடையோடு* மண்டிபோட்டு, என் கடவுளாகிய யெகோவாவிடம் கைகளை விரித்து இப்படிக் கெஞ்சினேன்:  “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+  முன்னோர்களின் காலத்திலிருந்து இன்றுவரை நாங்கள் செய்துவந்திருக்கிற அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.+ அதனால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் குருமார்களும் வேறு தேசத்து ராஜாக்களின் கையில் விடப்பட்டோம், வாளுக்குப் பலியாக்கப்பட்டோம்,+ கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போகப்பட்டோம்,+ கொள்ளையடிக்கப்பட்டோம்,+ அவமானப்படுத்தப்பட்டோம். இன்றுவரை எங்கள் நிலை இதுதான்.+  ஆனால் எங்கள் கடவுளாகிய யெகோவாவே, கொஞ்சக் காலத்துக்கு எங்கள்மேல் கருணை காட்டி, எங்களில் சிலருக்கு விடுதலை தந்திருக்கிறீர்கள். உங்களுடைய பரிசுத்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள்.+ எங்கள் கடவுளே, அடிமைத்தனத்திலிருந்து கொஞ்சம் விடுதலை கொடுத்து எங்கள் கண்களைப் பிரகாசிக்கச் செய்திருக்கிறீர்கள்.  எங்கள் கடவுளே, நாங்கள் அடிமைகளாக இருந்தாலும்+ அந்த அடிமைத்தனத்திலேயே நீங்கள் எங்களை விட்டுவிடவில்லை. எங்களுக்குப் புது வாழ்வு கொடுப்பதற்காக பெர்சிய ராஜாக்களுக்குமுன் எங்களுக்கு மாறாத அன்பைக் காட்டினீர்கள்.+ பாழாய்க் கிடக்கிற உங்களுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காகவும்,+ யூதாவிலும் எருசலேமிலும் எங்களுக்கென்று கற்சுவரை* எழுப்புவதற்காகவும் அப்படிச் செய்தீர்கள். 10  எங்கள் கடவுளே, இனி நாங்கள் என்ன சொல்வது? தீர்க்கதரிசிகள் மூலம் நீங்கள் கொடுத்த கட்டளைகளை நாங்கள் விட்டுவிட்டோமே. 11  நாங்கள் சொந்தமாக்கப்போகிற தேசம், ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை வேறு தேசத்தாரின் அசுத்தத்தினாலும் அருவருப்பான பழக்கங்களினாலும் நிறைந்திருக்கிற தேசம் என்று அவர்கள் மூலம் சொல்லியிருந்தீர்கள்.+ 12  நாங்கள் வலிமையான தேசமாகி, நிலத்தின் விளைச்சலை அனுபவித்து, தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ வேண்டுமென்றால், அவர்களுக்குப் பெண் கொடுக்கவோ அவர்களிடம் பெண் எடுக்கவோ கூடாது+ என்று சொல்லியிருந்தீர்கள். அவர்களுடைய சமாதானத்துக்காகவும் சந்தோஷத்துக்காகவும் எதையும் செய்யக் கூடாது+ என்றும் கட்டளை கொடுத்திருந்தீர்கள். ஆனால், நாங்கள் அதைக் கேட்காமல் போய்விட்டோம். 13  நாங்கள் செய்த கெட்ட காரியங்களாலும் பெரிய பாவங்களாலும்தான் எங்களுக்கு இப்படியெல்லாம் நடந்தது. ஆனாலும் எங்கள் கடவுளே, எங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை நீங்கள் கொடுக்கவில்லை.+ எங்களைக் காப்பாற்றி இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள்.+ 14  அப்படியிருக்கும்போது, அருவருப்பானதைச் செய்கிற ஜனங்களோடு நாங்கள் சம்பந்தம்* பண்ணி மறுபடியும் உங்களுடைய கட்டளைகளை எப்படி மீற முடியும்?+ அப்படிச் செய்தால், நீங்கள் கோபத்தில் பொங்கியெழுந்து எங்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் எல்லாரையும் அடியோடு அழித்துவிட மாட்டீர்களா? 15  இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் நீதியுள்ளவர்.+ அதனால்தான், இன்று கொஞ்சம் பேராவது மிஞ்சியிருக்கிறோம். இதோ, நாங்கள் குற்றவாளிகள், உங்கள் முன்னால் நிற்கக்கூட எங்களுக்கு அருகதை இல்லை.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “உள்ளங்கியையும் மேலங்கியையும்.”
வே.வா., “உள்ளங்கியோடும் மேலங்கியோடும்.”
வே.வா., “பாதுகாப்புச் சுவரை.”
வே.வா., “கலப்புத் திருமணம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா