எஸ்றா 3:1-13

3  அவரவர் நகரங்களில் குடியேறியிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும், ஏழாம் மாதம்+ வந்தபோது ஒருமனதாக எருசலேமில் கூடினார்கள்.  யோசதாக்கின் மகன் யெசுவாவும்,+ அவருடன் குருமார்களாக இருந்தவர்களும், சலாத்தியேலின்+ மகன் செருபாபேலும்,+ அவருடைய சகோதரர்களும் இஸ்ரவேலின் கடவுளுக்குப் பலிபீடம் கட்டினார்கள். உண்மைக் கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள தகன பலிகளைச் செலுத்துவதற்காக அதைக் கட்டினார்கள்.+  சுற்றியிருந்த மற்ற தேசத்தாரை நினைத்து அவர்கள் பயந்தாலும்,+ பலிபீடத்தை முன்பிருந்த இடத்திலேயே அமைத்து, காலையிலும் மாலையிலும் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய தகன பலிகளைச்+ செலுத்த ஆரம்பித்தார்கள்.  பின்பு, திருச்சட்டத்தில் எழுதியிருந்தபடியே கூடாரப் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.+ தினசரி கணக்கின்படி+ ஒவ்வொரு நாளும் தகன பலிகளைச் செலுத்தினார்கள்.  அதன்பின், தினமும் செலுத்துகிற* தகன பலியையும்,+ மாதப்பிறப்புக்கான* பலிகளையும்,+ யெகோவாவின் புனித பண்டிகைகளுக்கான+ பலிகளையும், யெகோவாவுக்காக ஜனங்கள் விருப்பப்பட்டுக் கொண்டுவந்த காணிக்கைகளையும்+ செலுத்தினார்கள்.  இப்படி, ஏழாம் மாதம், முதல் நாளிலிருந்தே+ யெகோவாவுக்குத் தகன பலிகளைச் செலுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், யெகோவாவின் ஆலயத்துக்கு அதுவரை அஸ்திவாரம் போடப்படவில்லை.  கற்களை வெட்டிச் செதுக்குகிறவர்களுக்கும்+ கைத்தொழிலாளிகளுக்கும்+ அவர்கள் பணம் கொடுத்தார்கள். அதோடு, சீதோனையும் தீருவையும் சேர்ந்த ஜனங்களுக்கு உணவையும் பானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் பெர்சிய ராஜா கோரேசின் உத்தரவுப்படி+ தேவதாரு மரங்களை லீபனோனிலிருந்து யோப்பாவுக்குக் கடல் வழியாகக் கொண்டுவந்திருந்தார்கள்.+  சலாத்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும், அவர்களுடைய மற்ற சகோதரர்களான குருமார்களும், லேவியர்களும், மற்றவர்களும் எருசலேமுக்குத் திரும்பி வந்த பின்பு,+ இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்தில் உண்மைக் கடவுளான யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும் வேலையை ஆரம்பித்தார்கள். அதை மேற்பார்வை செய்ய 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள லேவியர்களை அவர்கள் நியமித்தார்கள்.  அதனால், யூதா என்பவரின் வம்சத்தைச் சேர்ந்த யெசுவாவும் அவருடைய மகன்களும் சகோதரர்களும், கத்மியேலும் அவருடைய மகன்களும் உண்மைக் கடவுளின் ஆலய வேலையை மேற்பார்வை செய்தார்கள். அவர்களோடு சேர்ந்து லேவியர்களான எனாதாத்தின் வம்சத்தாரும்+ அவர்களுடைய மகன்களும் சகோதரர்களும் அந்த வேலையை மேற்பார்வை செய்தார்கள். 10  யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டபோது,+ குருமார்கள் தங்களுக்குரிய உடையில் எக்காளங்களோடும்,+ லேவியர்களான ஆசாபின் வம்சத்தார் ஜால்ராக்களோடும் எழுந்து நின்று யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; இஸ்ரவேல் ராஜா தாவீது கட்டளை கொடுத்திருந்தபடியே+ அப்படிச் செய்தார்கள். 11  அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி, “அவர் நல்லவர், இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று மாறிமாறி அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+ யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதால் ஜனங்களும் மிக சத்தமாக யெகோவாவைப் புகழ்ந்தார்கள். 12  முன்பிருந்த ஆலயத்தைக்+ கண்ணால் பார்த்திருந்த பெரியோர்களான குருமார்கள், லேவியர்கள், தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் பலர் இந்த ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதைப் பார்த்தபோது சத்தமாக அழுதார்கள்; மற்றவர்கள் சந்தோஷமாகக் கோஷம் போட்டார்கள்.+ 13  ரொம்பத் தூரம் கேட்கும் அளவுக்கு ஜனங்கள் சத்தமிட்டதால், ஆனந்தக் குரலுக்கும் அழுகைக் குரலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை.

அடிக்குறிப்புகள்

வே.வா., “வழக்கமான.”
வே.வா., “முதலாம் பிறைக்கான.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா