எண்ணாகமம் 1:1-54

1  இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதலாம் நாளில்,+ சீனாய் வனாந்தரத்தில்+ சந்திப்புக் கூடாரத்திலே+ மோசேயிடம் யெகோவா பேசினார். அவர் சொன்னது இதுதான்:  “இஸ்ரவேல் ஜனங்களைக் கணக்கெடுங்கள்.+ அவர்கள் ஒவ்வொருவரையும் வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாக, பெயர் பெயராக எண்ணுங்கள்.  இஸ்ரவேல் படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்களை+ நீயும் ஆரோனும் அணி அணியாக* பெயர்ப்பதிவு செய்ய வேண்டும்.  உங்களுக்கு உதவியாக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருடைய தந்தைவழிக் குடும்பத்துக்கு அவர் தலைவராக இருப்பார்.+  இப்படி உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டியவர்களின் பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில், சேதேயூரின் மகன் எலிசூர்.+  சிமியோன் கோத்திரத்தில், சூரிஷதாயின் மகன் செலூமியேல்.+  யூதா கோத்திரத்தில், அம்மினதாபின் மகன் நகசோன்.+  இசக்கார் கோத்திரத்தில், சூவாரின் மகன் நெதனெயேல்.+  செபுலோன் கோத்திரத்தில், ஹேலோனின் மகன் எலியாப்.+ 10  யோசேப்பின் மகன்களில்: எப்பிராயீம்+ கோத்திரத்தில், அம்மியூத்தின் மகன் எலிஷாமா. மனாசே கோத்திரத்தில், பெதாசூரின் மகன் கமாலியேல். 11  பென்யமீன் கோத்திரத்தில், கீதெயோனியின் மகன் அபிதான்.+ 12  தாண் கோத்திரத்தில், அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.+ 13  ஆசேர் கோத்திரத்தில், ஓகிரானின் மகன் பாகியேல்.+ 14  காத் கோத்திரத்தில், தேகுவேலின் மகன் எலியாசாப்.+ 15  நப்தலி கோத்திரத்தில், ஏனானின் மகன் அகீரா.+ 16  இவர்கள்தான் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள்தான் தங்களுடைய தகப்பன் கோத்திரத்தின் தலைவர்கள்,+ ஆயிரக்கணக்கானோரின் தலைவர்கள்”+ என்றார். 17  கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆண்களை மோசேயும் ஆரோனும் தங்களோடு சேர்த்துக்கொண்டார்கள். 18  இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரவேல் ஜனங்களை அவர்கள் ஒன்றுகூட்டினார்கள். அப்போது, 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். 19  யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, அவர்களுடைய பெயர்களை சீனாய் வனாந்தரத்தில் மோசே பதிவு செய்தார்.+ 20  இஸ்ரவேலின் மூத்த மகனாகிய ரூபனின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் ஒவ்வொருவராக எண்ணப்பட்டார்கள். 21  ரூபன் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 46,500 பேர். 22  சிமியோனின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் ஒவ்வொருவராக எண்ணப்பட்டார்கள். 23  சிமியோன் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 59,300 பேர். 24  காத்தின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 25  காத் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 45,650 பேர். 26  யூதாவின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 27  யூதா கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 74,600 பேர். 28  இசக்காரின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 29  இசக்கார் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 54,400 பேர். 30  செபுலோனின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 31  செபுலோன் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 57,400 பேர். 32  யோசேப்பின் மகனான எப்பிராயீமின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 33  எப்பிராயீம் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 40,500 பேர். 34  மனாசேயின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 35  மனாசே கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 32,200 பேர். 36  பென்யமீனின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 37  பென்யமீன் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 35,400 பேர். 38  தாணின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 39  தாண் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 62,700 பேர். 40  ஆசேரின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 41  ஆசேர் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 41,500 பேர். 42  நப்தலியின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 43  நப்தலி கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 53,400 பேர். 44  இஸ்ரவேலின் தந்தைவழிக் குடும்பங்களுக்குத் தலைவர்களான 12 பேரின் உதவியோடு மோசேயும் ஆரோனும் அவர்கள் எல்லாரையும் பெயர்ப்பதிவு செய்தார்கள். 45  படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள இஸ்ரவேலர்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 46  பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+ 47  ஆனால், லேவியர்கள்+ தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின்படி, மற்றவர்களுடன் பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை.+ 48  யெகோவா மோசேயிடம், 49  “லேவி கோத்திரத்தாரை மட்டும் நீ பெயர்ப்பதிவு செய்யக் கூடாது. மற்ற இஸ்ரவேலர்களுடன் சேர்த்து அவர்களை எண்ணக் கூடாது.+ 50  சாட்சிப் பெட்டி+ வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தையும் அதன் எல்லா பாத்திரங்களையும் பொருள்களையும் கவனித்துக்கொள்கிற பொறுப்பை லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும்.+ வழிபாட்டுக் கூடாரத்தில் அவர்கள் சேவை செய்வார்கள்,+ அதையும் அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும் அவர்கள் சுமந்துகொண்டு போவார்கள்.+ அவர்கள் வழிபாட்டுக் கூடாரத்தைச் சுற்றியே முகாம்போட வேண்டும்.+ 51  நீங்கள் ஒரு இடத்திலிருந்து புறப்படும்போது, லேவியர்கள்தான் வழிபாட்டுக் கூடாரத்தைப் பிரிக்க வேண்டும்.+ இன்னொரு இடத்துக்குப் போய்ச் சேரும்போது அவர்கள்தான் அதை மறுபடியும் அமைக்க வேண்டும். தகுதி இல்லாத* யாராவது அதன் பக்கத்தில் போனால் அவன் கொல்லப்பட வேண்டும்.+ 52  இஸ்ரவேலர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மூன்று கோத்திரங்களாகவும் அணி அணியாகவும்* கூடாரம் போட வேண்டும்.+ 53  இஸ்ரவேலர்கள்மேல் என்னுடைய கோபம் பற்றியெரியாமல் இருப்பதற்காக, லேவியர்கள் சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தைச் சுற்றி முகாம்போட வேண்டும்.+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தைக் கவனித்துக்கொள்வது* லேவியர்களின் பொறுப்பு”+ என்றார். 54  மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படி இஸ்ரவேல் ஜனங்கள் செய்தார்கள். எல்லாவற்றையும் அவர்கள் அப்படியே செய்தார்கள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
அதாவது, “லேவியனாக இல்லாத.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படியும்.”
வே.வா., “கூடாரத்தைக் காவல்காப்பது; கூடாரச் சேவை செய்வது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா