கேள்வி 13
வேலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
“திறமையாக வேலை செய்கிறவனைப் பார்த்திருக்கிறாயா? அவன் சாதாரண ஆட்கள் முன்னால் அல்ல, ராஜாக்கள் முன்னால் நிற்பான்.”
“திருடுகிறவன் இனி திருடாமல் இருக்க வேண்டும்; இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காக, தானே தன் கையால் பாடுபட்டு நேர்மையாக உழைக்க வேண்டும்.”
“சாப்பிட்டு, குடித்து, தங்கள் கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். இதைவிட மேலானது வேறு எதுவுமே இல்லை. . . . இது கடவுள் தரும் பரிசு.”