Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

கேள்வி 6

மேசியாவைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது?

தீர்க்கதரிசனம்

“எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லகேமே, . . . இஸ்ரவேலை ஆளப்போகிற ராஜா உன்னிடமிருந்து வருவார்.”

மீகா 5:2

நிறைவேற்றம்

‘ஏரோது ராஜாவின் காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்; அதன் பின்பு, கிழக்கிலிருந்து ஜோதிடர்கள் எருசலேமுக்கு வந்தார்கள்.’

மத்தேயு 2:1

தீர்க்கதரிசனம்

“என்னுடைய அங்கிகளைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள், என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்.”

சங்கீதம் 22:18

நிறைவேற்றம்

‘படைவீரர்கள் இயேசுவை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்த பின்பு, அவருடைய மேலங்கிகளை நான்கு பாகங்களாக்கினார்கள்; உள்ளங்கி தையல் இல்லாமல் மேலிருந்து கீழ்வரை ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. அதனால், “இதைக் கிழிக்க வேண்டாம்; இது யாருக்கு என்று குலுக்கல் போட்டுப் பார்க்கலாம்” என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.’

யோவான் 19:23, 24

தீர்க்கதரிசனம்

“அவருடைய எல்லா எலும்புகளையும் அவர் பாதுகாக்கிறார். அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படுவதில்லை.”

சங்கீதம் 34:20

நிறைவேற்றம்

“இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்திருந்ததைப் பார்த்து அவருடைய கால்களை உடைக்காமல் விட்டுவிட்டார்கள்.”

யோவான் 19:33

தீர்க்கதரிசனம்

“நம்முடைய குற்றத்துக்காகத்தான் அவர் குத்தப்பட்டார்.”

ஏசாயா 53:5

நிறைவேற்றம்

“படைவீரர்களில் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளியே வந்தன.”

யோவான் 19:34

தீர்க்கதரிசனம்

“அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கூலியாகக் கொடுத்தார்கள்.”

சகரியா 11:12, 13

நிறைவேற்றம்

“பின்பு, பன்னிரண்டு பேரில் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து முதன்மை குருமார்களிடம் போய், ‘அவரைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?’ என்று கேட்டான். அவர்கள் 30 வெள்ளிக் காசுகள் கொடுப்பதாக அவனோடு ஒப்பந்தம் செய்தார்கள்.”

மத்தேயு 26:14, 15; 27:5