கேள்வி 5
பைபிள் சொல்லும் முக்கியச் செய்தி என்ன?
“உனக்கும் பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”
“நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.”
“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.”
“சமாதானத்தைத் தருகிற கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப்போடுவார்.”
“எல்லாமே மகனுக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட பின்பு, எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்திய கடவுளுக்கு மகனும் கீழ்ப்பட்டிருப்பார். அப்போது, கடவுள்தான் எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்.”
‘ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அந்தச் சந்ததி கிறிஸ்துதான். அதோடு, நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றால், உண்மையிலேயே ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறீர்கள்.’
“உலகத்தின் அரசாங்கம் நம் எஜமானுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமான அரசாங்கமானது. அவர் என்றென்றும் ராஜாவாக ஆட்சி செய்வார்.”
“உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.”
“அவர் பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பை, அதாவது பிசாசாகிய சாத்தானை, பிடித்து 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போட்டார்.”