கேள்வி 17
குடும்ப வாழ்க்கைக்கு பைபிள் எப்படி உதவுகிறது?
கணவர்கள்/அப்பாக்கள்
“அதேபோல, கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவிமீது அன்பு காட்டுகிறவன் தன்மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான். . . . நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது அன்பு காட்டுவதுபோல், உங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.”
“அப்பாக்களே, உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள். அதற்குப் பதிலாக, யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி வளர்த்து வாருங்கள்.”
மனைவிகள்
“மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.”
“மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; இதுவே நம் எஜமானைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏற்றது.”
பிள்ளைகள்
“பிள்ளைகளே, நம் எஜமான் விரும்புகிறபடி உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள், இதுதான் சரியானது. ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்’ என்பதுதான் வாக்குறுதியோடு கொடுக்கப்பட்ட முதலாம் கட்டளை. ‘நீ சீரும் சிறப்புமாக இருப்பாய், பூமியில் நீண்ட காலம் வாழ்வாய்’ என்பதுதான் அந்த வாக்குறுதி.”
“பிள்ளைகளே, உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிந்து நடங்கள். இதுதான் நம் எஜமானுக்குப் பிரியமானது.”