Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் யெகோவா விரும்புவதை செய்வீர்களா?

நீங்கள் யெகோவா விரும்புவதை செய்வீர்களா?

நேரத்தை ஒதுக்கி இந்தப் புத்தகத்தை படித்ததற்காக ரொம்ப நன்றி. யெகோவாவின் சாட்சிகள் யார், நாங்கள் என்ன செய்கிறோம்... இதெல்லாம் இப்போது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். நாங்கள்தான் யெகோவா விரும்புகிறபடி நடக்கிற ஜனங்கள் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். நீங்கள் தொடர்ந்து கடவுளைப் பற்றி கற்றுக்கொண்டே இருங்கள். கற்றுக்கொள்கிற விஷயங்களை உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களிடம், நண்பர்களிடம் சொல்லுங்கள். எங்கள் கூட்டத்துக்கு தவறாமல் வாருங்கள்.—எபிரெயர் 10:23-25.

யெகோவாவைப் பற்றி படிக்க படிக்க உங்கள்மீது அவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று புரிந்துகொள்வீர்கள். பதிலுக்கு, நீங்களும் அவர்மீது அன்பு காட்ட வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். (1 யோவான் 4:8-10, 19) அவர்மீது அன்பு இருப்பதை நீங்கள் எப்படி ஒவ்வொரு நாளும் காட்டலாம்? கடவுள் சொல்வது போல் ஒழுக்கமாக நடப்பது ஏன் நல்லது? எங்களோடு சேர்ந்து நீங்களும் எப்படி கடவுள் விரும்புவதை செய்யலாம்? உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துகிறவர் இதையெல்லாம் உங்களுக்கு சொல்லித் தருவார். நீங்களும் உங்கள் குடும்பமும் ‘கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருக்க முடியும், முடிவில்லாத வாழ்வுக்காக காத்திருக்கவும்’ முடியும்.—யூதா 21.

கடவுளைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொண்டு அவர் சொல்கிற வழியில் நடப்பதற்கு இந்தப் புத்தகத்தை படியுங்கள்.