Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 பாடம் 15

மூப்பர்கள் சபைக்கு எப்படி உதவுகிறார்கள்?

மூப்பர்கள் சபைக்கு எப்படி உதவுகிறார்கள்?

பின்லாந்து

சொல்லிக்கொடுக்கிறார்

வீட்டில் சந்தித்து பேசுகிறார்

வெளி ஊழியம் செய்கிறார்

எங்களுடைய சபையில் சம்பளத்திற்கு வேலை செய்கிற பாதிரியார்கள் யாருமே இல்லை. கிறிஸ்தவ சபையை ஆரம்பித்தபோது அதை கவனித்துக்கொள்வதற்கு மூப்பர்கள் இருந்தார்கள். அவர்கள் ‘கடவுளுடைய சபையாகிய மந்தையை’ கவனித்துக்கொண்டார்கள் என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 20:28) அதேபோல் இன்றும் சபையை கவனித்துக்கொள்வதற்கு மூப்பர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு யெகோவாவுடன் நல்ல பந்தம் இருக்கிறது. சபை பொறுப்புகளையும் சபையில் இருக்கிறவர்களையும் இவர்கள் அக்கறையாக பார்த்துக்கொள்கிறார்கள். இந்தப் பொறுப்பை “கட்டாயத்தால் இல்லாமல் கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும், அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல் ஆர்வமாகவும்” செய்கிறார்கள். (1 பேதுரு 5:1-3) இவர்கள் சபையில் இருப்பவர்களுக்காக என்னென்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?

எங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார்கள். யெகோவாவோடு எங்களுக்கு இருக்கிற நட்பை பலப்படுத்த மூப்பர்கள் பைபிளிலிருந்து நிறைய ஆலோசனைகளை கொடுக்கிறார்கள். சபையில் இருப்பவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கடவுள் கொடுத்திருப்பதால் எங்களை அதிகாரம் பண்ணுவதற்கு பதிலாக நாங்கள் சந்தோஷமாக இருக்க உதவி செய்கிறார்கள். (2 கொரிந்தியர் 1:24) ஒரு மேய்ப்பர் அவருடைய ஒவ்வொரு ஆட்டையும் அக்கறையாக கவனித்துக்கொள்வார். அதேபோல், மூப்பர்களும் சபையில் இருக்கிற ஒவ்வொருவரையும் அக்கறையாக கவனித்துக்கொள்கிறார்கள்.—நீதிமொழிகள் 27:23.

கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ சொல்லிக்கொடுக்கிறார்கள். நாங்கள் கடவுள்மீது இன்னும் அதிகமாக நம்பிக்கை வைப்பதற்கு ஒவ்வொரு வாரமும் சபைக் கூட்டங்களை மூப்பர்கள் நடத்துகிறார்கள். (அப்போஸ்தலர் 15:32) வித்தியாசமான விதங்களில் ஊழியம் செய்வதற்கு எங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். அதோடு, ஊழியம் செய்வதில் எங்களுக்கு நல்ல உதாரணமாகவும் இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துகிறார்கள். கடவுளோடு எங்களுக்கு இருக்கும் பந்தத்தை பலப்படுத்த உதவி செய்கிறார்கள். வீடுகளிலோ ராஜ்ய மன்றத்திலோ எங்களை சந்தித்து தேவையான உதவியையும் உற்சாகத்தையும் பைபிளிலிருந்து கொடுக்கிறார்கள்.—யாக்கோபு 5:14, 15.

மூப்பர்கள் சபை பொறுப்புகளை பார்த்துக்கொள்கிறார்கள், வேலைக்கும் போகிறார்கள், குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறார்கள். சபையில் இருப்பவர்களுக்காக அவர்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறார்கள். இப்படிக் கடினமாக உழைக்கும் மூப்பர்களுக்கு மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 5:12, 13.

  • சபையில் என்னென்ன பொறுப்புகளை மூப்பர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்?

  • சபையில் இருக்கிற ஒவ்வொருவரையும் எப்படி அன்பாக பார்த்துக்கொள்கிறார்கள்?