இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?

உலகம் முழுவதும் நிறைய நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். நாடு, இனம், கலாச்சாரம் என எத்தனையோ வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனாலும், இவர்கள் எல்லாரும் எப்படி ஒரே குடும்பம் போல் இருக்கிறார்கள்?

கடவுளுடைய விருப்பம் என்ன?

உலகம் முழுவதும் உள்ள எல்லா ஜனங்களும் அவருடைய சித்தத்தை அதாவது, விருப்பத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார். அவருடைய விருப்பம் என்ன? கடவுளை பற்றி இன்று யார் எல்லாருக்கும் சொல்லித் தருகிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஜனங்கள்?

யெகோவாவின் சாட்சிகளில் எத்தனை பேரை உங்களுக்கு தெரியும்? அவர்களைப் பற்றி உண்மையிலேயே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது?

இந்தப் பெயரை நாங்கள் ஏற்றுக்கொண்டதற்கு மூன்று காரணங்கள்.

பைபிளில் இருக்கும் உண்மைகளை மறுபடியும் எப்படி கண்டுபிடித்தோம்?

பைபிளிலிந்து நாங்கள் சொல்லிக்கொடுப்பது சரிதான் என்று எப்படி சொல்லலாம்?

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஏன் தயாரித்தோம்?

எந்த விதத்தில் இந்த மொழிபெயர்ப்பு விசேஷமானது?

எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் என்ன நன்மை?

பைபிளை ஆழமாக படிப்பதற்கும் ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும் நாங்கள் ஒன்றாக கூடிவருகிறோம். நீங்களும் எங்கள் கூட்டத்திற்கு வாருங்கள்!

நாம் ஏன் கூட்டங்களுக்குப் போக வேண்டும்?

கிறிஸ்தவர்கள் ஒன்றாக கூடிவர வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அப்படி வருவதால் எப்படியெல்லாம் நன்மை அடைகிறோம் என்று தெரிந்துகொள்வீர்கள்.

கூட்டங்களில் என்ன கற்றுக்கொள்கிறோம்?

கூட்டங்களில் என்ன நடக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? அங்கே சொல்லிக் கொடுக்கிற பைபிள் விஷயங்கள் கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

கூட்டங்களுக்குப் போகும்போது ஏன் நன்றாக உடை உடுத்த வேண்டும்?

நாம் எப்படி உடை உடுத்துகிறோம் என்பதை கடவுள் கவனிக்கிறாரா? எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி தலைவார வேண்டும் என்று தீர்மானிக்க பைபிள் அறிவுரைகள் நமக்கு உதவியாக இருக்கிறது?

கூட்டங்களுக்கு எப்படி தயாரிக்கலாம்?

முன்கூட்டியே படித்துவிட்டு போனால் சபை கூட்டத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.

குடும்ப வழிபாடு என்றால் என்ன?

குடும்ப வழிபாட்டுக்காக யெகோவாவின் சாட்சிகள் ஏன் நேரம் ஒதுக்குகிறார்கள்? யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கும் குடும்பத்தில் இருக்கிறவர்களிடம் நெருங்கி வருவதற்கும் குடும்ப வழிபாடு எப்படி உதவும் என்று யோசித்துப் பாருங்கள்.

நாங்கள் எதற்காக மாநாடுகளுக்குப் போகிறோம்?

ஒவ்வொரு வருடமும் நாங்கள் மூன்று தடவை மாநாடுகளுக்கு ஒன்று கூடி வருகிறோம். மாநாட்டில் கலந்துகொள்வது உங்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கும்?

நாங்கள் எப்படி ஊழியம் செய்கிறோம்?

இயேசு இந்த பூமியில் இருந்தபோது எப்படி பிரசங்கித்தாரோ அப்படித்தான் நாங்களும் செய்கிறோம். நாங்கள் எப்படியெல்லாம் பிரசங்கிக்கிறோம்?

யாரைப் பயனியர் என்று சொல்கிறோம்?

யெகோவாவின் சாட்சிகளில் சிலர் 30 மணிநேரமோ, 50 மணிநேரமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ ஊழியம் செய்கிறார்கள். எதனால் தெரியுமா?

பயனியர்களுக்காக என்னென்ன பள்ளிகள் நடத்தப்படுகிறது?

பிரசங்க வேலையை முழு நேரமாக செய்கிற பயனியர்களுக்கு பயிற்சி கொடுக்க என்னென்ன விசேஷ பள்ளிகள் இருக்கின்றன?

மூப்பர்கள் சபைக்கு எப்படி உதவுகிறார்கள்?

பைபிள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூப்பர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. சபையில் இருக்கிற வேலைகளை முன்நின்று செய்கிறார்கள். அவர்கள் என்னென்ன உதவிகளை செய்கிறார்கள்?

உதவி ஊழியர்கள் என்னென்ன வேலைகளை செய்கிறார்கள்?

சபையில் எல்லா வேலைகளும் நல்லபடியாக நடக்க உதவி ஊழியர்கள் நிறைய உதவிகளை செய்கிறார்கள். அவர்கள் எப்படியெல்லாம் உதவி செய்கிறார்கள் தெரியுமா?

வட்டார கண்காணிகள் எப்படி உதவி செய்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கு வட்டார கண்காணிகள் ஏன் வருகிறார்கள்? அவர்களிடம் கற்றுக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்படி உதவி செய்கிறோம்?

பேரழிவில் பாதிக்கப்பட்ட எங்கள் சகோதர சகோதரிகளுக்கு தேவையானதை எல்லாம் கொடுக்கிறோம், பைபிளிலிருந்து ஆறுதல் அளிக்கிறோம். அதை எப்படி செய்கிறோம்?

உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?

கடைசி காலத்தில் வாழ்கிறவர்களுக்கு ஆன்மீக “உணவு கொடுப்பதற்காக,” அதாவது கடவுளை பற்றி தொடர்ந்து சொல்லிக் கொடுப்பதற்காக, ஒரு அடிமையை கண்டிப்பாக ஏற்பாடு செய்வதாக இயேசு சொன்னார். இது எப்படி இன்று நிறைவேறுகிறது?

இன்று ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்?

முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழுவில் அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இருந்தார்கள். இன்று ஆளும் குழுவில் யார் இருக்கிறார்கள்?

பெத்தேல் என்றால் என்ன?

பெத்தேல் விசேஷமான இடம். முக்கியமான ஒரு வேலை நடக்க இங்கிருக்கிறவர்கள் உதவி செய்கிறார்கள். இங்கே வேலை செய்கிறவர்களை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?

கிளை அலுவலகத்தில் என்னென்ன வேலைகள் நடக்கின்றன?

கிளை அலுவலகத்தை சுற்றிப் பார்க்க வாருங்கள். அங்கிருக்கும் ஒருவர் உங்களுக்கு அதை சுற்றி காட்டுவார்.

எங்களுடைய புத்தகங்களை எப்படி எழுதுகிறோம், மொழிபெயர்க்கிறோம்?

750-க்கும் அதிகமான மொழிகளில் புத்தகங்களை தயாரிக்கிறோம். எதற்காக இவ்வளவு முயற்சி எடுக்கிறோம்?

உலகம் முழுவதும் நாங்கள் செய்கிற வேலைக்கு எப்படி பணம் கிடைக்கிறது?

நன்கொடை விஷயத்தில் எங்களுடைய அமைப்புக்கும் மற்ற மதங்களுக்கும் என்ன வித்தியாசம்?

ராஜ்ய மன்றம்​—⁠ஏன் கட்டுகிறோம், எப்படி கட்டுகிறோம்?

எங்களுடைய கூட்டங்கள் நடக்கிற இடத்தை ஏன் ‘ராஜ்ய மன்றம்’ என்று சொல்கிறோம்? எங்களுடைய கூட்டங்களை நடத்துவதற்கு இந்த மன்றங்கள் எப்படி உதவியாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ராஜ்ய மன்றத்தை எப்படி நன்றாக பராமரிக்கலாம்?

ராஜ்ய மன்றம் சுத்தமாக, நல்லபடியாக இருந்தால் அது நம் கடவுளுக்கு புகழ் சேர்க்கும். ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்ய என்னென்ன ஏற்பாடுகள் இருக்கின்றன?

ராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரி எப்படி உதவியாக இருக்கிறது?

பைபிளை இன்னும் நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்க ஆசைப்படுகிறீர்களா? ராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரியைப் பயன்படுத்துங்கள்!

எங்கள் வெப்சைட்டில் என்ன இருக்கிறது

நாங்கள் என்ன நம்புகிறோம், என்ன செய்கிறோம் என்று இந்த வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம். பைபிள் சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், இந்த வெப்சைட்டில் பதில் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் யெகோவா விரும்புவதை செய்வீர்களா?

யெகோவா உங்கள்மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். அவருக்கு பிடித்த விதத்தில் நடந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்று எப்படி காட்டலாம்?