பாடம் 11
கடவுள் கொடுத்த சட்டங்களின்படி வாழ்வதால் என்ன நன்மை?
1. நமக்கு ஏன் ஆலோசனை தேவை?
படைப்பாளருக்குத்தான் நம்மைவிட எல்லாமே தெரியும். ஒரு அன்பான அப்பாவைப் போல் நம்மீது பாசம் வைத்திருக்கிறார். அவருடைய உதவி இல்லாமல் நம்மால் வாழ முடியாது. (எரேமியா 10:23) பிள்ளைகளுக்கு எப்படி அப்பா-அம்மாவுடைய உதவி தேவையோ அதேபோல் நமக்கும் கடவுளுடைய உதவி தேவை. (ஏசாயா 48:17, 18) நம்முடைய நன்மைக்காக கடவுள் நிறைய சட்டங்களை பைபிளில் கொடுத்திருக்கிறார்.—2 தீமோத்தேயு 3:16-ஐ வாசியுங்கள்.
இன்றும் எதிர்காலத்திலும் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு யெகோவாவின் சட்டங்களும் ஆலோசனைகளும் நமக்கு உதவுகின்றன. யெகோவா நம்மை படைத்திருப்பதால் அவர் கொடுக்கிற ஆலோசனைகளுக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும். முழு மனதோடு அவர் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்.—சங்கீதம் 19:7, 11-ஐயும் வெளிப்படுத்துதல் 4:11-ஐயும் வாசியுங்கள்.
2. பைபிள் ஆலோசனைகள் நமக்கு எப்படி உதவுகிறது?
பைபிளில் கடவுள் சில சட்டங்களை கொடுத்திருக்கிறார். அவை குறிப்பிட்ட சில சூழ்நிலைகளுக்கு மட்டும்தான் பொருந்தும். (உபாகமம் 22:8) அதேசமயத்தில், எல்லா சூழ்நிலைகளுக்கும் உதவுகிற நிறைய ஆலோசனைகளையும் பைபிளில் கொடுத்திருக்கிறார். எந்த சூழ்நிலையில் எந்த ஆலோசனைகளை பயன்படுத்தலாம் என்று நாம் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். (நீதிமொழிகள் 2:10-12) உதாரணமாக, உயிர் நமக்கு கடவுள் கொடுத்த பரிசு என்று பைபிள் சொல்கிறது. இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வீட்டில் இருக்கிறபோது, வேலை செய்கிறபோது, பயணம் செய்கிறபோது... என எல்லா நேரத்திலும் நாம் கவனமாக இருப்போம். நம்முடைய உயிருக்கோ மற்றவர்களுடைய உயிருக்கோ ஆபத்து வராதபடி நடந்துகொள்வோம்.—அப்போஸ்தலர் 17:28-ஐ வாசியுங்கள்.
3. முக்கியமான இரண்டு கட்டளைகள் எவை?
முக்கியமான இரண்டு கட்டளைகளை இயேசு சொன்னார். அவர் சொன்ன முதல் கட்டளையிலிருந்து மனிதர்கள் கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அவர்மீது அன்பு நீதிமொழிகள் 3:6) அப்படி செய்தால் நாம் கடவுளுடைய நண்பராக முடியும், சந்தோஷமாக வாழ முடியும். எதிர்காலத்தில் சாவில்லாத வாழ்க்கை நமக்கு கிடைக்கும்!—மத்தேயு 22:36-38-ஐ வாசியுங்கள்.
காட்ட வேண்டும், அவரை உண்மையாக வணங்க வேண்டும் என்று புரிந்துகொள்கிறோம். இதை மனதில் வைத்து வாழ்க்கையில் எந்தவொரு முடிவையும் நாம் எடுக்க வேண்டும். (மற்றவர்கள்மீது அன்பு காட்ட வேண்டும் என்று இரண்டாவது கட்டளையில் இயேசு சொன்னார். (1 கொரிந்தியர் 13:4-7) இதை கடைப்பிடித்தால் கடவுளைப் போல மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்வோம். எல்லாரோடும் சமாதானமாக இருப்போம்.—மத்தேயு 7:12; 22:39, 40-ஐ வாசியுங்கள்.
4. கடவுள் கொடுத்த சட்டங்களால் நமக்கு என்ன நன்மை?
குடும்பத்தில் அன்பாக, ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:12-14) அதோடு, கணவனும் மனைவியும் காலம் முழுக்க சேர்ந்தே இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. இந்த பைபிள் சட்டங்களின்படி வாழும்போது குடும்பம் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.—ஆதியாகமம் 2:24-ஐ வாசியுங்கள்.
பைபிள் சொல்கிறபடி நடந்தால் வேலையை பாதுகாத்துக்கொள்ளலாம், தேவையில்லாத பணக்கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அதோடு, நாம் மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். உதாரணத்திற்கு, வேலை செய்பவர்கள் நேர்மையாக, சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. வேலை செய்பவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்றுதான் முதலாளிகளும் எதிர்பார்க்கிறார்கள். (நீதிமொழிகள் 10:4, 26; எபிரெயர் 13:18) இருப்பதை வைத்து திருப்தியாக வாழ வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அதோடு, சொத்து சேர்ப்பதில் குறியாக இருப்பதைவிட கடவுளோடு இருக்கும் நட்பை வளர்ப்பதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம் என்றும் சொல்கிறது.—மத்தேயு 6:24, 25, 33-ஐயும் 1 தீமோத்தேயு 6:8-10-ஐயும் வாசியுங்கள்.
பைபிள் சட்டங்களின்படி நடந்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். (நீதிமொழிகள் 14:30; 22:24, 25) உதாரணத்திற்கு, குடிவெறியர்களாக இருக்கக் கூடாது என்று பைபிள் சொல்கிறது. இந்த சட்டத்தை கடைப்பிடித்தால் உயிருக்கு ஆபத்தான வியாதிகளை தவிர்க்கலாம், நிறைய விபத்துகளையும் தவிர்க்கலாம். (நீதிமொழிகள் 23:20) அதேசமயத்தில், அளவாக குடிப்பதை தவறு என்று யெகோவா சொல்வதில்லை. (சங்கீதம் 104:15; 1 கொரிந்தியர் 6:10) கடவுள் நமக்கு கொடுக்கிற புத்திமதிகளின்படி நடந்தால் தவறான விஷயங்களை யோசிக்கவும் மாட்டோம், செய்யவும் மாட்டோம். (சங்கீதம் 119:97-100) கடவுளுடைய சட்டங்களின்படி வாழ்ந்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆனால், நன்மைகள் கிடைப்பதற்காக மட்டுமே உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை, யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதற்கே அப்படி செய்கிறார்கள்.—மத்தேயு 5:14-16-ஐ வாசியுங்கள்.