காவற்கோபுரம் (படிப்பு இதழ்) அக்டோபர் 2017
நவம்பர் 27-டிசம்பர் 24, 2017-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
வாழ்க்கை சரிதை
யெகோவா கொடுக்கிற வேலையைச் செய்தால் ஆசீர்வாதங்கள் நிச்சயம்!
1952-ல், ஆலிவ் மாத்யூஸும் அவருடைய கணவரும் அயர்லாந்துக்குப் போய் பயனியர் ஊழியம் செய்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். யெகோவா எப்படி அவர்களை ஆசீர்வதித்தார்?
‘செயலிலும் உண்மை மனதோடும்’ அன்பு காட்டுங்கள்
நமக்கு வெளிவேஷமில்லாத, உண்மையான அன்பு இருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
சத்தியம் ‘சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்குகிறது’
எந்த அர்த்தத்தில் “பிரிவினையை” உண்டாக்க வந்ததாக இயேசு சொன்னார், அது உங்களை எப்படிப் பாதிக்கலாம்?
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு தைரியமான தீர்மானம் எடுக்கிறார்
அவர் யார்? அவருக்கும் இயேசுவுக்கும் என்ன சம்பந்தம்? அவரைப் பற்றி நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
சகரியா பார்த்த தரிசனங்கள்—நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
பறக்கும் சுருள், பாத்திரத்துக்குள் ஒரு பெண், காற்றில் பறக்கும் இரண்டு பெண்கள். வியக்க வைக்கும் இந்தத் தரிசனங்களை யெகோவா ஏன் சகரியாவுக்குக் காட்டினார்?
ரதங்களும் கிரீடமும் உங்களைப் பாதுகாக்கின்றன
செம்பினாலான மலைகள், போர் ரதங்கள், ராஜாவாக நியமிக்கப்படும் தலைமைக் குரு. சகரியா பார்த்த கடைசி தரிசனம் இன்று கடவுளுடைய மக்களுக்கு என்ன நம்பிக்கை தருகிறது?
ஒரு உதவியால் கிடைத்த பலன்
ஒருவர் செய்த உதவியால், பைபிள் சத்தியங்களை எதிர்த்தவருக்கு அவற்றின்மேல் எப்படி ஆர்வம் வந்தது?
உங்களுக்குத் தெரியுமா?
யூதர்களுடைய எந்தப் பழக்கத்தினால் சத்தியம் செய்வதை இயேசு கண்டனம் செய்தார்?