நல்ல நண்பன் வேண்டுமா
டவுன்லோட்:
லீட் ஷீட்
1. சோகம் ஏன் செல்லம் உன் கண்ணில்
ஓ நண்பர்கள் இல்லை என்றா
நண்பர் ஏராளம் உண்டு தேவன் வீட்டில்
வா தேடிச்செல்வோம் ஒன்றாய்
(பல்லவி)
நண்பன் ஒன்று வேண்டுமா
நட்போடு நீயும் வா
பாசம் தா நேசம் தா
தாராளமாக தா
அன்பினால் பண்பினால்
உள்ளம் எல்லாம் வெல்ல வா
2. பேசும் முன் கூச்சம் வந்தாலே
அப்போதே ஜெபம் ஒன்று செய்
கூச்சம் எல்லாம் ஓடி போகும் தன்னாலே
தங்கம் நீ முயற்சி செய்
(பல்லவி)
நண்பன் ஒன்று வேண்டுமா
நட்போடு நீயும் வா
பாசம் தா நேசம் தா
தாராளமாக தா
அன்பினால் பண்பினால்
உள்ளம் எல்லாம் வெல்ல வா

