Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

உங்கள் வேலைக்கு எப்படி பண உதவி கிடைக்கிறது?

உங்கள் வேலைக்கு எப்படி பண உதவி கிடைக்கிறது?

யெகோவாவின் சாட்சிகள் தரும் மனமுவந்த நன்கொடைகள் மூலமாகவே எங்கள் பிரசங்க வேலைக்கு பண உதவி கிடைக்கிறது. எங்களது கூட்டங்களில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை , அங்கத்தினர்கள் தசமபாகம் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. (மத்தேயு 10:7, 8) மாறாக, எங்களது கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நன்கொடை பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும், விரும்பியவர்கள் நன்கொடை செலுத்தலாம். நன்கொடை கொடுத்தவர்கள் தங்கள் பெயரை தெரிவிக்கமாட்டார்கள்.

சம்பளத்துக்கு வேலைசெய்யும் குருக்கள் எங்கள் மத்தியில் இல்லாததால் எங்களால் செலவுகளை சமாளிக்க முடிகிறது. அதோடு, வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு செல்லும் சாட்சிகளுக்கு சம்பளம் எதுவும் கிடையாது, எங்கள் வணக்க இடங்களும் அடக்கமாக இருக்கின்றன.

யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் நன்கொடைகள், இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மிஷனரிகளையும் பயண ஊழியர்களையும் ஆதரிக்கவும், வளரும் நாடுகளில் வணக்க ஸ்தலங்களை கட்டவும், பைபிளையும் பைபிள் சார்ந்த பிற பிரசுரங்களை அச்சிட்டு ஏற்றுமதி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

சபையின் செலவுகளுக்கு அல்லது உலகளாவிய வேலைக்கு அல்லது இரண்டிற்கும் சேர்த்து நன்கொடை அளிப்பதா என்பதை நன்கொடை அளிக்கும் ஒவ்வொருவரும் தீர்மானிப்பார். ஒவ்வொரு சபையும் தங்கள் சபையின் கணக்கு அறிக்கையை சபை அங்கத்தினர்களுக்கு தவறாமல் தெரிவிப்பார்கள்.