Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

மற்ற மதங்களை மதிக்கிறீர்களா?

மற்ற மதங்களை மதிக்கிறீர்களா?

எல்லா விதமான ஆட்களையும் உயர்வாக மதியுங்கள்’ என்று பைபிள் சொல்வதால் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம். (1 பேதுரு 2:17) உதாரணத்திற்கு, சில நாடுகளில் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அரசியல்வாதிகளை அல்லது சட்டத்தை இயற்றுபவர்களை தூண்டி மற்ற மத தொகுதிகளின் வேலையை தடை செய்ய நாங்கள் நிர்ப்பந்தம் செய்வதில்லை. எங்களுடைய ஒழுக்க மற்றும் மத நம்பிக்கைகளை பொது மக்கள்மீது திணிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என பிரச்சாரம் செய்வதில்லை. மாறாக, மற்றவர்கள் எங்களிடம் மதிப்பு மரியாதை காட்ட வேண்டுமென்று விரும்புவதைப் போலவே நாங்களும் அவர்களிடம் மதிப்பு மரியாதை காட்டுகிறோம்.—மத்தேயு 7:12.