ஞானஸ்நானம் பெற்ற யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் இப்பொழுது ஊழியத்தில் ஈடுபடாமல், சொல்லப்போனால் கிறிஸ்தவ கூட்டுறவைவிட்டு விலகி சென்றாலும் நாங்கள் அவர்களை ஒதுக்கித் தள்ளுவதில்லை. உண்மையை சொன்னால், நாங்களே அவர்களை சந்தித்து அவர்களுடைய ஆன்மீக ஆர்வத்தை மீண்டும் துண்டிவிட முயலுகிறோம்.

ஒருவர் வினைமையான பாவம் செய்துவிட்டால்கூட அவரை சட்டென்று சபையிலிருந்து நீக்கிவிடமாட்டோம். என்றாலும், ஞானஸ்நானம் பெற்ற ஒருவர் பைபிள் நெறிமுறைகளுக்கு விரோதமான செயல்களை பழக்கமாக செய்துவந்து மனந்திரும்பாமல் போகும்போது அவர் ஒதுக்கித் தள்ளப்படுவார் அல்லது சபையிலிருந்து நீக்கப்படுவார். “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று பைபிள் தெளிவாக சொல்கிறது.—1 கொரிந்தியர் 5:13.

கணவர் சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் ஆனால் அவருடைய மனைவி, பிள்ளைகள் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தால் அப்பொழுது என்ன? அவருக்கு குடும்பத்தோடு இருந்த ஆன்மீக பிணைப்பு முறிந்துவிடும் ஆனால் அவருடைய குடும்ப பிணைப்பு முறியாது. திருமண பந்தமும், குடும்பத்தினர்கள் மத்தியில் இருக்கும் அன்பும் தொடரும்.

சபைநீக்கம் செய்யப்பட்ட நபர்கள் எங்கள் கூட்டங்களுக்கு வரலாம். அவர்கள் விரும்பினால், சபை மூப்பர்களை அணுகி ஆன்மீக உதவியை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு நபரும் மீண்டும் யெகோவாவின் சாட்சி ஆவதற்கு உதவுவதே எங்கள் நோக்கம். சபைநீக்கம் செய்யப்பட்ட நபர் தன்னுடைய மோசமான நடத்தையை விட்டுவிட்டு பைபிள் நெறிமுறைகளுக்கு இசைய வாழ்வதற்கான விருப்பத்தை காட்டும்போது அவர் தாராளமாக மீண்டும் சபையின் ஒரு அங்கத்தினராக ஆகலாம்.