Skip to content

யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் எப்படி வந்தது?

யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் எப்படி வந்தது?

 யெகோவா என்பது கடவுளுடைய பெயர் என பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 6:3; சங்கீதம் 83:17) தான் உறுதியாய் நம்புகிற கருத்தை அல்லது சத்தியத்தை மற்றவர்களிடம் சொல்பவர்தான் ஒரு சாட்சி என்று அழைக்கப்படுகிறார்.

 இவ்வாறு, யெகோவாவின் சாட்சிகள் என்று நாங்கள் வைத்திருக்கும் பெயர்தாமே எல்லாவற்றையும் படைத்த யெகோவாவை பற்றிய சத்தியத்தை ஒரு தொகுதியாக அறிவிக்கும் கிறிஸ்தவர்களாக எங்களை அடையாளம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 4:11) நாங்கள் வாழும் விதத்தின் மூலமும் நாங்கள் கற்றுக்கொண்ட பைபிள் சத்தியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமும் சாட்சிகொடுக்கிறோம்.—ஏசாயா 43:10-12; 1 பேதுரு 2:12