நீங்கள் என்ன செய்யலாம்

உங்களால் முடியும் என்று நினையுங்கள்! ‘என்னால இன்னும் நல்லா செய்ய முடியாது’ என்று நீங்களாகவே உங்களை தாழ்வாக நினைக்காதீர்கள். உங்களிடம் இருக்கிற திறமையை நீங்களே குறைவாக எடை போடாமல், என்னால் முடியும் என்று நினையுங்கள். உதாரணத்துக்கு, அப்போஸ்தலன் பவுல் பேசும் விதத்தைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்தபோது (தவறாக குற்றம்சாட்டியபோது), அவர் இப்படி சொன்னார்: “எனக்குப் பேச்சுத்திறன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாகவே அறிவுத்திறன் இல்லாமல் இல்லை.” (2 கொரிந்தியர் 10:10; 11:6) பவுல், தன்னுடைய குறையை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அதேசமயத்தில், எதை அவரால் திறமையாகசெய்ய முடியும் என்றும் தெரிந்து வைத்திருந்தார். உங்களைப் பற்றி என்ன? உங்களால் எதை திறமையாக செய்ய முடியும்? உங்களுடைய திறமைகளைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால், ஏன் நீங்கள் பெரியவர்களிடம் உதவி கேட்கக் கூடாது? நீங்கள் எதை திறமையாக செய்வீர்கள் என்று கண்டுபிடிக்க அப்படிப்பட்ட நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

நன்றாக படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். பள்ளியில் நல்ல மார்க் வாங்க எந்த குறுக்கு வழியும் இல்லை. எப்படியாவது நீங்கள் படித்தே ஆக வேண்டும். இந்த வார்த்தைகள் உங்களுக்கு கசப்பாக இருக்கலாம். ஆனால், உண்மையில் படிப்பது உங்களுக்கு நிறைய நன்மைகளை தரும். அதற்காக நீங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும், படிப்பு உங்களுக்கு தேனாய் தித்திக்கும். நல்ல படிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள, எதை எப்போது செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு செய்ய வேண்டும். ஆனால் மறந்துவிடாதீர்கள், படிப்பதைத்தான் நீங்கள் முதலில் செய்ய வேண்டும். பைபிளும் இதைத்தான் சொல்கிறது, “நகைக்க ஒரு காலமுண்டு,” “நடனம்பண்ண ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:1, 4; 11:9) மற்ற இளைஞர்களை போலவே நீங்களும் விளையாடுவதற்கோ அல்லது வேறு எதாவது பொழுதுப்போக்கிற்கோ நேரம் செலவு செய்ய ஆசைப்படலாம். ஆனால் பைபிள் சொல்லும் இந்த அறிவுரையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். பிரசங்கி 11:4 இப்படி சொல்கிறது, “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.” அதாவது, எதை செய்தாலும் அதை சரியான நேரத்தில் செய்ய வேண்டும். தள்ளிப் போட கூடாது. அப்படி செய்தால்தான், முக்கியமான வேலைகளை செய்து முடிக்க முடியும். முதலில் படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள், அதற்கு பிறகு விளையாடுங்கள். கவலைப்படாதீர்கள்! திட்டம் போட்டு செய்யும்போது இரண்டையும் செய்ய நேரம் இருக்கும்.

எடையை தூக்குவது உங்கள் உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள உதவும். அதேபோல், நன்றாக படிப்பது பள்ளியில் நல்ல மார்க் எடுக்க உதவும்