பைபிள் தரும் பதில்

விவாகரத்து செய்வதை பைபிள் அனுமதிக்கிறது. என்றாலும், திருமண பந்தத்தை முறிப்பதற்கு ஒரேவொரு காரணம் மட்டுமே இருக்கிறதென்று இயேசு குறிப்பிட்டார்; “பாலியல் முறைகேட்டை [திருமணத் துணையோடு அல்லாமல் வேறு யாருடனாவது உடலுறவு வைத்துக்கொள்வதை] தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்” என்று அவர் சொன்னார்.—மத்தேயு 19:9.

தந்திரமாக, நயவஞ்சகமாகச் செய்யப்படுகிற விவாகரத்தைக் கடவுள் வெறுக்கிறார். அற்ப விஷயங்களுக்காகத் துணையை விட்டுப் பிரிபவர்களை அவர் நியாயந்தீர்ப்பார்; அதுவும், வேறு ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்கள் துணையை விட்டு விலகுபவர்களிடம் அவர் கணக்குக் கேட்காமல் விடமாட்டார்.—மல்கியா 2:13-16; மாற்கு 10:9.