Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?

நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?

பைபிள் தரும் பதில்

ஆம், உதவும். வியாதிப்பட்டிருக்கிற தன் ஊழியர்கள்மீது கடவுள் அக்கறையோடு இருக்கிறார். விசுவாசமிக்க ஒரு ஊழியரைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவன் சுகமில்லாமல் படுத்துக் கிடக்கும்போது யெகோவா அவனைத் தாங்குவார்.” (சங்கீதம் 41:3) நாள்பட்ட வியாதியோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தால், அதைச் சமாளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று படிகள் உங்களுக்கு உதவலாம்:

  1. சகித்திருக்க பலம் கேட்டு ஜெபம் செய்யுங்கள். அப்படிச் செய்தால், “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” உங்களுக்குக் கிடைக்கும், அதன் விளைவாக உங்கள் கவலை தணியும், தொடர்ந்து சகிக்க பலம் கிடைக்கும்.—பிலிப்பியர் 4:6, 7.

  2. நம்பிக்கையான மனநிலையோடு இருங்கள். சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து. ஆனால், உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.” (நீதிமொழிகள் 17:22) நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்; அப்படிச் செய்வது மனபாரத்தைக் குறைப்பதோடு, உங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவலாம்.

  3. எதிர்கால நம்பிக்கையைப் பலமாக்குங்கள். நாள்பட்ட வியாதியோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தாலும், பலமான நம்பிக்கை இருந்தால், சந்தோஷமாக இருப்பீர்கள். (ரோமர் 12:12) சீக்கிரத்தில் ஒரு காலம் வரும், அப்போது “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்” என்று பைபிள் முன்னறிவிக்கிறது. (ஏசாயா 33:24) அந்தச் சமயத்தில் கடவுள் எல்லா விதமான வியாதிகளையும் குணமாக்குவார்; நவீன மருத்துவத் துறையால் குணமாக்க முடியாத நாள்பட்ட வியாதிகள் எல்லாவற்றையும் குணமாக்கிவிடுவார். உதாரணமாக, வயதானவர்கள் திரும்ப இளமைக்குத் திரும்புவதைப் பற்றி பைபிள் இப்படி விவரிக்கிறது: “அவனுடைய உடல் இளமையில் இருந்ததைவிட ஆரோக்கியம் அடையும். அவன் மறுபடியும் இளமைத் துடிப்போடு வாழ்வான்.”—யோபு 33:25.

உங்கள் கவனத்திற்கு: கடவுள் உதவி செய்வார் என்பதை யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் நம்பினாலும், நாள்பட்ட வியாதிகளுக்கு மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக்கொள்கிறோம். (மாற்கு 2:17) ஆனாலும், குறிப்பிட்ட எந்தவொரு மருத்துவ சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரை செய்வதில்லை; இப்படிப்பட்ட விஷயங்களில் அவரவர் சொந்தமாகத் தீர்மானம் எடுக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.