Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

சூதாடுவது பாவமா?

சூதாடுவது பாவமா?

பைபிள் தரும் பதில்

சூதாட்டத்தைப் பற்றி பைபிள் விலாவாரியாக எதுவும் சொல்வதில்லை. ஆனால், அதைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டம் என்னவென்பதை பைபிள் நியமங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.—எபேசியர் 5:17. *

  • சூதாட்டத்துக்குத் தீனிபோடுவது பேராசை; இதைக் கடவுள் வெறுக்கிறார். (1 கொரிந்தியர் 6:9, 10; எபேசியர் 5:3, 5) மற்றவர்களுடைய நஷ்டத்தில் லாபம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்தான் சூதாடிகளுக்கு இருக்கிறது. அப்படி மற்றவர்களுடைய பணம், பொருளுக்காகப் பேராசைப்படுவதை பைபிள் கண்டனம் செய்கிறது.—யாத்திராகமம் 20:17; ரோமர் 7:7; 13:9, 10.

  • சூதாடுவது (சிறு தொகைக்காகக்கூட!) பண ஆசையைத் தூண்டிவிடும், நாசகரமான விளைவுகளைச் சந்திக்க வைத்துவிடும்.—1 தீமோத்தேயு 6:9, 10.

  • சூதாட்டக்காரர்கள் பெரும்பாலும் மூடப்பழக்கவழக்கங்களை அல்லது அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட நம்பிக்கைகள் உண்மை வணக்கத்தோடு ஒத்துவராத சிலை வழிபாடுபோல் இருப்பதாகக் கடவுள் கருதுகிறார்.—ஏசாயா 65:11.

  • உழைக்காமலேயே ஊதியம் பெற வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிடுவதற்குப் பதிலாக, கடினமாய் உழைக்க வேண்டும் என்றே பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (பிரசங்கி 2:24; எபேசியர் 4:28) பைபிள் தரும் இந்த ஆலோசனையைக் கடைப்பிடிக்கிறவர்கள் “தாங்களே உழைத்து” சம்பாதிக்கிற உணவைச் சாப்பிட முடியும்.—2 தெசலோனிக்கேயர் 3:10, 12.

  • சூதாட்டம் ஆபத்தான போட்டி மனப்பான்மையை வளர்த்துவிடும்; இப்படிப்பட்ட மனப்பான்மையை பைபிள் கண்டனம் செய்கிறது.—கலாத்தியர் 5:26.

^ பாரா. 3 இயேசுவின் உடையை யார் எடுத்துக்கொள்வது என்று தீர்மானிப்பதற்காக ரோமப் படைவீரர்கள் குலுக்கல் போட்டார்கள், அதாவது ‘சீட்டுப்போட்டார்கள்,’ என்று பைபிள் சொல்கிறது; பைபிள் பதிவுகளில் சூதாட்டத்தைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிற பதிவு இது மட்டும்தான்.—மத்தேயு 27:35, தமிழ் O.V.; யோவான் 19:23, 24, தமிழ் O.V.