பைபிள் தரும் பதில்

உயிர் என்பது கடவுளுடைய கண்களில் புனிதமானது. ஒரு கருவைக்கூட தனித்தன்மையுள்ள நபராகத்தான்... உயிருள்ள நபராகத்தான்... அவர் பார்க்கிறார். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது ராஜா கடவுளைப் பற்றி இப்படி எழுதினார்: “நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன.” (சங்கீதம் 139:16) வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தீங்கு செய்கிற நபர் தண்டிக்கப்பட வேண்டுமென்று கடவுள் சொல்லியிருந்தார். அப்படியானால், வயிற்றிலுள்ள ஒரு குழந்தையை அழிப்பது அவருடைய கண்களில் கொலைக்குச் சமானம்.—யாத்திராகமம் 20:13; 21:22, 23.

ஆனால், அவசர ஆபத்தான பிரசவ நேரத்தில் தாய் போராடிக்கொண்டிருக்கும்போது, தாயா குழந்தையா என்ற நிலைமை வந்தால் என்ன செய்வது? அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்தத் தம்பதிதான் அதை முடிவுசெய்ய வேண்டும்.