அக்டோபர் 23, 2018
புது வரவு என்ன
புதிய உலக மொழிபெயர்ப்பின் ஆராய்ச்சிப் பதிப்பு இப்போது JW லைப்ரரியில்
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பின் ஆராய்ச்சிப் பதிப்பு இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கிறது. அதை உங்களுடைய JW லைப்ரரியில் டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஆனால் முதலில் உங்களுடைய JW லைப்ரரி அப்ளிகேஷன் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு வழியில் ஆராய்ச்சி பைபிளை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
வழி 1
JW லைப்ரரியின் முதல் பக்கத்திலுள்ள புது வரவு என்ற பகுதியில் இருக்கும் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பின் (ஆராய்ச்சிப் பதிப்பு) என்ற பிரசுரத்தை கிளிக் செய்யுங்கள். அதன்பிறகு வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
வழி 2 (புது வரவு என்ற பகுதியில் ஆராய்ச்சி பைபிள் தோன்றவில்லை என்றால் இப்படிச் செய்யுங்கள்)
Navigation drawer-ல் இருக்கும் பைபிளை கிளிக் செய்யுங்கள் (Android சாதனங்கள்) அல்லது பைபிளின் குறியை கிளிக் செய்யுங்கள் (iOS மற்றும் Windows சாதனங்கள்)
மொழிகள் பட்டனை கிளிக் செய்யுங்கள். உங்களுடைய சாதனம் சிறியதாக இருந்தால், அப்ளிகேஷனின் மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்வதன் மூலம் மொழிகள் பட்டனைப் பார்க்க முடியும்.
தமிழ்—ஆராய்ச்சி பைபிள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதன்பிறகு வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
சில சாதனங்களில், தமிழ்—ஆராய்ச்சி பைபிள் டவுன்லோட் ஆகியிருந்தாலும் அதைப் பயன்படுத்துவதற்கு இன்னொரு முறை கிளிக் செய்ய வேண்டியிருக்கலாம்.

