ஃபைஸா செய்த், ஜூன் 2009 முதற்கொண்டு எரிட்ரியாவில் சிறை தண்டனை அனுபவிக்கிறார்.
விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள்—இடங்கள்
மார்ச் 2026-ன் கணக்கின்படி உலகம் முழுவதும் 275 யெகோவாவின் சாட்சிகள் சிறையில் இருக்கிறார்கள்.
சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரு அடிப்படையான உரிமை என்று சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தின் பிரிவு 18 சொல்கிறது. ஆனால், சில நாடுகளில் இந்த அடிப்படை உரிமை யெகோவாவின் சாட்சிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. தங்கள் மதத்தை கடைப்பிடிப்பதாலும் ராணுவ சேவையை மனசாட்சியின் அடிப்படையில் மறுப்பதாலும் அவர்கள் அநியாயமாக சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள், கொடூரமாகவும் நடத்தப்பட்டிருக்கிறார்கள்.
“சிறையில் இருப்பவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அவர்களோடு நீங்களும் சிறையில் இருப்பதுபோல் நினைத்துக்கொள்ளுங்கள்.”—எபிரெயர் 13:3.

