பாகம் 2
“இவர் என் அன்பு மகன்”
(வீடியோ நேரம்: 52:46)
மேசியா வரப்போவதைப் பற்றி யோவான் ஸ்நானகர் அறிவிக்கிறார். இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கிறார். இந்தப் பாகத்தில் கீழே இருக்கும் பதிவுகளின் காட்சிகளை பார்க்கலாம்:
யோவான் ஸ்நானகர் தன் ஊழியத்தை ஆரம்பிக்கிறார் (லூக்கா 3:1, 2; யோவான் 1:6)
ஒளியைப் பற்றி யோவான் சாட்சி கொடுக்கிறார் (யோவான் 1:7, 8)
ஞானஸ்நானத்தைப் பற்றி யோவான் அறிவிக்கிறார் (மத்தேயு 3:1-12; லூக்கா 3:3-18; மாற்கு 1:1-8)
இயேசுவின் ஞானஸ்நானம் (மத்தேயு 3:13-17; மாற்கு 1:9-11; லூக்கா 3:21, 22)
கடவுளுடைய சக்தி இயேசுவை வனாந்தரத்துக்கு வழிநடத்துகிறது (மாற்கு 1:12 13; மத்தேயு 4:1; லூக்கா 4:1, 2
இயேசுவின் வம்சாவளி பட்டியல் (லூக்கா 3:23-38; மத்தேயு 1:1-17)
பிசாசின் சோதனைகளை இயேசு எதிர்த்து நிற்கிறார் (மத்தேயு 4:2-11; லூக்கா 4:3-13)
“நான் கிறிஸ்து அல்ல“ என்றும் வனாந்தரத்தில் ஒரு செய்தியை சத்தமாகச் சொல்கிறவர்தான் என்றும் யோவான் சொல்கிறார் (யோவான் 1:19-28)
இயேசு “கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!” என்று யோவான் மக்களிடம் சொல்கிறார் (யோவான் 1:29-31)
இயேசுமேல் கடவுளுடைய சக்தி இறங்கியது என்றும் அந்தச் சக்தியால் ஞானஸ்நானம் கொடுப்பவர் இயேசுதான் என்றும் யோவான் சாட்சி கொடுக்கிறார் (யோவான் 1:32-34)
யோவானின் சீஷர்கள் இயேசுவை பின்பற்றுகிறார்கள் (யோவான் 1:35-39)
அந்திரேயா தன் சகோதரன் பேதுருவை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வருகிறார் (யோவான் 1:40-42)
பிலிப்புவும் நாத்தான்வேலும் இயேசுவின் சீஷர்களாக ஆகிறார்கள் (யோவான் 1:43-51)
கலிலேயாவில் இருக்கிற கானா ஊரில் ஒரு கல்யாணத்தில் இயேசு தண்ணீரை திராட்சமதுவாக மாற்றுகிறார் (யோவான் 2:1-12)
இயேசு முதல் தடவையாக எருசலேம் ஆலயத்தை சுத்தப்படுத்துகிறார் (யோவான் 2:13-17)
தன்னை எதிர்த்த யூதர்களிடம் ஆலயத்தை மூன்று நாட்களில் எழுப்புவேன் என்று இயேசு சொல்கிறார் (யோவான் 2:18-22)
இயேசு செய்த அடையாளங்களைப் பார்த்து நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள் (யோவான் 2:23-25)

